இயக்குனர் ஷங்கர்
இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள "ஐ" படத்தின் பாடல் வெளியிட்டு
விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது.இந்த விழாவில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு உள்பட முன்னணி
நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் அர்னால்டு இன்று காலை விமானம் மூலம்
சென்னை வந்தார். அவரை இயக்குனர் ஷங்கர் உள்பட திரையுலகப் பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில்
நடிகர் அர்னால்ட் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அர்னால்ட் , அமெரிக்காவின்
கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருடனும் சகஜமாக பழகிய அர்னால்ட்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கின் வெளியே கூடியுள்ள கூட்டம்.