Saturday, August 30, 2014

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்



நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு பேசிய மர்ம ஆசாமி நபர், திருவான்மியூரில் உள்ள அஜீத்  வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்தார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்  வரவழைக்கப்பட்டது. அஜீத்  வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தியபின்னர்  வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
     ஆனாலும் அஜீத் வீட்டிற்கு பாதுகாப்பு போடபட்டு உள்ளது. வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Friday, August 29, 2014

சர்வதேச காவல் துறையின் புதிய தூதரானார் நடிகர் ஷாரூக் கான்!


பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்,  சர்வதேச காவல் துறையின்(இன்டர்போல்) விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே  நடிகர் ஜாக்கி சான் இந்த விழிப்புணர்வு பிரச்சார தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு சர்வதேச பிரச்சாரத்திற்கு தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் ஷாரூக் கான் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி பேசிய ஷாரூக், "இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை சிறந்த கவுரவமாக கருதுகிறேன்" என்றார்.

தீபாவளியை மகிழ்விக்க வரும் 'ஐ' படம்



ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் '' படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டவுடனே இந்த படம் மீண்டும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துவிட்டது. சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்.  படத்தில் பல வெளிநாட்டுக் கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதனால் படத்தை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆகிய இந்திய மொழிகள் தவிர உலகின் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'Avatar', 'Lord of the Rings', 'Hobbit' உள்ளிட்ட படங்களுக்கு ஒப்பனை செய்த Weta Workshop என்ற நிறுவனம் '' படத்தில் பணியாற்றி வருகிறது. Stan Winstion Studios எப்படி 'எந்திரன்' படத்தில் பணியாற்றியதோ, அதைப் போன்று '' படத்தில் Weta Workshop பணியாற்றுகிறது. விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறாராம். மிக மிக ஒல்லியான தேகம், சராசரியான உடலமைப்பு, பின்னர் கட்டு மஸ்தான உடல் என படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப அவ்வப்போது அவருடைய உடலமைப்பை மாற்றி வருகிறாராம். ஷங்கர், விக்ரமின் இந்த ஈடுபாட்டை மிகவும் பாராட்டியிருக்கிறார். விக்ரமின் ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சனின் உடை, நடிப்பு என அவரையும் வெகுவாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

அர்னால்டுடன்  '' படத்தின் இணை தயாரிப்பாளர் ரமேஷ் பாபு

இதற்கிடையே  படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அதை ஏற்றுகொண்ட  அர்னால்டு, சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் '' இசை வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் ஆஸ்கர் ஃபிலிம்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குப் பதிப்புக்கான '' இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி சான் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, August 25, 2014

‘கத்தி’ படப்பாடல் வெளியிட்டு விழா தேதி அறிவிப்பு



கடந்த சில மாதங்களாக பரபரப்புடன் பேசபட்டுவரும் ‘கத்தி’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை லீலா பாலசில்  செப்டம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. லண்டனில் நடைபெறுவதாக இருந்த இந்த விழா மாற்றப்பட்டுள்ளது. படத்தின் ஆல்பத்தை, இந்த வாரத்திற்குள் பதிவுசெய்துமுடிக்க இசைஅமைப்பாளர் அனிருத் மும்முரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. விழாவின்போது, அனிருத்தின் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றும் இருக்குமென்றும் தெரிகிறது. அஞ்சான் பட இசை வெளியிட்டின்போது வரத்தவறிய சமந்தா இந்த விழாவிற்கு வருவார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Sunday, August 24, 2014

பத்ம பூஷன் ரிச்சர்ட் அடென்போரோ மரணம்.



ஆங்கில திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அடென்போரோ
(29ஆகஸ்ட்1923 - 24ஆகஸ்ட்2014) நேற்று காலமானார். ‘காந்தி’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான இவர், இந்த படத்திற்காக இரண்டு அகடமி விருதுகள் பெற்றவர். மேலும் நான்கு பாப்டா விருதுகள் மற்றும் நான்கு கோல்டன் க்ளோப் விருதுகள் பெற்றிருக்கிறார். நடிகராக இவர் நடித்த ‘பிரைட்டன் ராக்’, ‘தி கிரேட் எஸ்கேப்’, ’10 ரிலிங்டோன் பிளேஸ்’ ‘மிரக்கில் ஆன் 34த் ஸ்ட்ரீட்’ மற்றும் ‘ஜுராசிக் பார்க்’ போன்ற படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத அளவு பதிந்தவை. ஆரம்ப காலத்தில் இரண்டாம் உலகபோரின் போது ராயல் விமான படையில் விமானியாக தனது வாழ்கையை ஆரம்பித்த ரிச்சர்ட் அடென்போரோ, தனது திரைப்பட வாழ்க்கையை 1942 ல் ‘இன் விச் வி சர்வ்’ என்ற படத்தில் மாலுமியாக நடித்து ஆரம்பித்தார். 1947 ல் ‘பிரைட்டன் ராக்’ என்ற படத்தில் இவர் நடித்த பிங்கி பிரவுன் என்ற வேடம் இவரது திரை வாழ்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1949ல், இவர், பிரிட்டனின் ஆறாவது சிறந்த வசூல் நடிகராக தேர்ந்தெடுக்கபட்டார். 1983 ல், இந்தியா, இவருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.


Saturday, August 23, 2014

இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு புதிய கவுரவம்



இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். இவரது இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028' உலக அளவில் பிரபலமாகியுள்ளது. உலகம் முழுவதும் வெளியான கிரிக்கெட் சார்ந்த படங்களில் சிறந்த 5 தருணங்கள் என பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான 'தி கார்டியன்' வெளியிட்டுள்ள பட்டியலில், வெங்கட் பிரபுவின் சென்னை-28 திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தைப் பற்றி தி கார்டியனில், "காதல், நட்பு மற்றும் கிரிக்கெட்டைப் பற்றிய வெங்கட்பிரபுவின் இந்த முதல் திரைப்படத்தில், படத்தின் முக்கியப் பாத்திரம் ஒன்று, எதிரணியினரின் பகுதிக்கு குடிபெயர்ந்து செல்லும் காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து 'லகான்' மற்றும் 'சென்னை-28' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பது ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான 'தி லேடி வேனிஷஸ்' என்ற திரைப்படம். ஹிட்ச்காக் படத்தோடு, தன்னுடைய திரைப்படமும் பட்டியலில் இணைந்திருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பகிர்ந்துகொண்டுள்ளார் வெங்கட் பிரபு.

தனது முதல் படத்திலிருந்தே ரசிகர்களின் முழுமையான வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் வெங்கட்பிரபு. ஒரு நடிகராக, பாடகராக இவர் பெற்ற வெற்றிகளை விட, இயக்குநராக பெற்ற வெற்றிகள் அதிகம். பெரும்பாலும் இளைஞர் பட்டாளத்தையே தனது ரசிகர் வட்டமாக வைத்திருக்கும் வெங்கட்பிரபு, அஜித் குமாரை வைத்து இயக்கிய 'மங்காத்தா'வினால், பன்மடங்கு அந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டார்.

Friday, August 22, 2014

‘கத்தி’ படத்தின் புதிய போஸ்டர்கள்

கடந்த சில வாரங்களாக கத்தி படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு வலுத்து கொண்டிருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மாற்றபட்டுவிடுவார் என்றும் விஜய்யும் முருகதாசும் இணைந்து படத்தை வெளியிடுவார்கள் என்றும் இணையதளங்களில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று வெளியிடப்பட்ட இரண்டு போஸ்டர்களின் மூலம் கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தபட்டுவிட்டது.






Thursday, August 21, 2014

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் திருப்புகழ்



சித்தார்த்-வேதிகா நடிப்பில் காவிய படமாக உருவாகியுள்ள புதிய படம் காவியத்தலைவன்'. இப்படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு விழா திங்கட்கிழமையன்று சூரியன் எஃப்.எம்.ரேடியோ நிலையத்தில் நடைபெற்றது. முதல்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, காவியத்தலைவன் திரைப்படம் நமது கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் திரைப்படம். இதை உலகத்தின் சிறந்த இயக்குநர்களுக்கு போட்டுக்காட்டுவேன் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
இந்த படத்தில் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் பாடல் ஓன்று அமைந்துள்ளது. இசைப்புயலின் கைவண்ணத்தில் இந்த பாடலை கேட்பபவர்கள், குறிப்பாக முருகபக்தர்கள்,  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லாமலிருக்க மாட்டார்கள்.


திருப்புகழ்
       ஏவினை நேர்விழி மாதரை மேவிய        
     ஏதனை மூடனை நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
     ஏழையை மோழையை அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
     வாய்மையி லாதனை யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவது மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயி லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
     தேன்மொழி யாள்தரு சிறியோனே

   சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
                                  சீரலை வாய்வரு பெருமாளே

பொருள்
அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை
மூடனை, ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை,

படிப்பே இல்லாத முழு ஏழையை, மடையனை, என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள நோயும் பிணியும் கொண்டவனை, உண்மை இல்லாதவானை, இகழ்ந்து ஒதுக்காமல்

சிறந்த மணிகளாலான சிலம்புள்ள உன் பாதங்களை, ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ?

புலவர்கள் பாடிய நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர் முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை விரும்பிச் சென்று காட்டிலே கூடிய வீரனே தலைவனே சிறந்த மயில் வாகனனே

தேவி, மனோன்மணி, அன்னை, பராபரை, தேன் மொழியாள் உமையின் சிறுமகனே 

விண்வரை உயர்ந்த சோலைகளின் நிழலினிலே வளங்கும் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.

Wednesday, August 20, 2014

மூன்று நாளில் முப்பது கோடி - ரஜினியை முந்திய சூர்யா!



அஞ்சான் படத்தின் முதல் வார வசூலின் மூலம் சூரியாதான் அதிகமான தமிழ் மக்களின் மனம்கவர்ந்த நடிகர் என்பதை நிருபித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த ரஜினியை தாண்டி, இரண்டு படிகள் முன்னேறி சென்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

முழு விவரத்தையும் பார்க்க..... 

Tuesday, August 12, 2014

திசைமாறும் ’கத்தி’ பட எதிர்ப்பு.



கடந்த இரண்டுவாரங்களாக இணையமெங்கும் லைக்கா, கத்தி, சீமான் என விமர்சன விசக்காற்றுக்கள் அடித்து கொண்டே இருக்கின்றது. கத்தி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ராஜபட்சேவிற்கு பெரும் உதவிகளை செய்தவை என்றும் ராஜபட்சேவை தொழில் முறையில் இணைத்து உள்ளதாகவும், இந்த நிறுவனம் முதலீடு செய்யும் பணத்தை கொண்டு எடுக்கும் கத்தி படம் தடைசெய்ய படவேண்டும் என்பதே இப்போதுள்ள பிரச்சனை.
படத்தை வெளியிட அனுமத்திக்க மாட்டோம் என்று முகம் தெரியாத சிலர் தொடர்ந்து இணையதளங்களில் முழக்கமிட்டு வருகின்றனர். விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை முற்றுகையிடபோகிறோம் என்று தினமும் அறிக்கை வந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் மவுனம் காத்த எல்லா ஈழ ஆதரவு தலைவர்களின் அமைதிக்கும் காரணம் தேடாத இணையதள சிந்தாந்திகள், சீமானை மட்டும் குறிவைத்து தங்களது கற்பனை பதில்களை, பதிவுகளை பரப்பிக்கொண்டிருந்தார்கள். போராட்டத்தை மக்களை நோக்கி நகர்த்துவதை விட சீமான் எதிர்ப்பை நோக்கியே நகர்த்துவதை பார்த்தால்... இவர்கள் லைக்காவிற்க்காக சீமானை எதிர்கின்றீர்களா ? இல்லை சீமானுக்காக லைக்காவை எதிர்கின்றீர்களா ? என்ற அய்யப்பாடு எல்லோருடைய மனதிலும் எழ ஆரம்பித்தது.
இந்த நிலையில், ஒரு அலைபேசி நிறுவனம் போராட்டத்தை தீவிரபடுத்த சென்னையிலுள்ள மாணவர்கள் அமைப்புகளுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்வதாக ஒரு செய்தி, காட்டு தீயை போல பரவ, இதுவரை பேசாமலிருந்த விஜய் ரசிகர்கள் “முடிந்தால் படத்தை தடுத்து பார்” என்று களமிறங்க தயாராகிவிட்டதாக தெரிகிறது.

ராஜபக்ஷே பணம் சம்பாதிப்பதற்காக தமிழ்நாட்டில் திரைப்படம் எடுக்கிறார் என்ற முட்டாள்தனமான வாதத்தை முன்வைத்து இணையதளங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், கத்தி படத்திற்கும் அதன் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்திற்கும் நல்ல விளம்பரத்தை கொடுத்துள்ளது என்பதுதான் உண்மை.
சீமானின் ஆவேச பேட்டி.....


சொந்த குரலில் சூரியா பாடிய பாடல்.

 பாடலை பார்க்க



சூரியாவின் நண்பரும் திரையுலகில் போட்டியாலருமான விஜய் திரைப்படங்களில் ஓரிரு பாடல்கள் பாடியிருந்தாலும் சூரியா இதுவரை எந்த படத்திலேயும் பாடுவதற்கு முயற்சி செய்யவில்லை. இது சூரியாவின் ரசிகர்களுக்கு பெரிய குறையாக இருந்து வந்தது. இந்த குறையை தீர்க்க அஞ்சான் படத்தில் ஒரு பாடலை அவரது குரலிலேயே பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமார் எழுதிய "ஏக் தோ தீன்" என்ற பாடலை ஆண்ட்ரியாவுடன் பாடிய இந்த பாடலின் வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Monday, August 11, 2014

கோலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் காலமானார்.

Good Morning, Vietnam (1987) — Adrian Cronauer


பிரபல அமெரிக்க நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ்(ஜூலை21, 1951 – ஆகஸ்ட் 11, 2014)  இன்று காலமானார். சின்னத்திரையில் மூர்க் அண்ட் மிண்டி (1978 – 1982) என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி பின்னாளில் சிறந்த நடிகராகவும் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் புகழ்பெற்றவர். சிறந்த நடிகருக்கான அகடமி விருதுவுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஒருமுறை சிறந்த துணை நடிகருக்கான அகடமி விருதை பெற்றுள்ளார். இதுபோக இரண்டு எம்மி விருதுகள், நான்கு கோல்டன் க்ளோப் விருதுகள், இரண்டு ஸ்க்ரீன் அக்டர்ஸ் கில்ட் விருதுகள் மற்றும் நான்கு கிராம்மி விருதுகள் பெற்ற சிறந்த நடிகர் ஆவார்.

Jumanji (1995) — Alan Parrish



Lee Daniels’ The Butler (2013) — Dwight D. Eisenhower

இவர் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற படங்கள்:

  1. The World According to Garp (1982),
  2. Good Morning, Vietnam (1987),
  3. Dead Poets Society (1989),
  4. Awakenings (1990),
  5. The Fisher King (1991), and
  6. Good Will Hunting (1997),
  7. Popeye (1980),
  8. Hook (1991),
  9. Aladdin (1992),
  10. Mrs. Doubtfire (1993),
  11. Jumanji (1995),
  12. The Birdcage (1996),
  13. Night at the Museum (2006), and
  14. Happy Feet (2006). 


‘கத்தி’ பட எதிர்ப்பின் பின்னணி என்ன?



ஆரம்பிக்கும்போதே எதிர்ப்பு

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, விஜய்   நடித்து வரும் 'கத்தி' படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. வரும் தீபாவளிக்கு படத்தினை வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தயாரிக்க ஆரம்பித்த நாளிலிருந்தே இதற்கு எதிர்ப்பு வந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். பொதுவாக திரைப்படங்களில் வில்லனாக நடிப்பவர் ஏதாவது ஒரு ஜாதி அல்லது மதத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டால்தான் தமிழ்நாட்டில் எதிர்ப்பு வரும். அவைகள் எல்லாம் படம் வெளியான பின்னர்தான் உருவாகும். ஆனால் கத்தி படத்தை பொறுத்தவரை அந்த படத்தின் கதை என்ன என்று இதுவரை யாருக்கும் தெரியாது. இருப்பினும் எதிர்ப்பு வருகிறது என்றால் அதற்கு காரணம் அதன் தயாரிப்பாளர். கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி முதலில் ஒரு இணையத்தளம் செய்தியை வெளியிட்டது. இது குறித்து வேறு எந்த ஊடகங்களிலும் செய்திகள் எதுவும் வரவில்லை. ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்றாலே தமிழீழ ஆதரவு கட்சிகளெல்லாம் எதிர்ப்பு குரல் கொடுக்குமே என்று எதிர்பார்க்கப்பட்டு, அந்த மாதிரி எதுவும் நடக்காததினால் பிரச்சினையை கிளப்பிவிட்ட இணையத்தளம், பேசாமலிருந்துவிட்டது. தற்போது படம் வெளியாகும் நேரத்தில், அந்த இணையத்தளம், “தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு” என்ற ஒரு அமைப்பு நடிகர் விஜய்க்கு மிகவும் கடுமையாக (கீழ் தரமாக ) கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியிருப்பதாக கூறி ஒரு சுரோட்டியின் புகைப்படத்தை வெளியிட்டது.

கண்டன சுரொட்டி 

இந்த புகைப்படத்தை பார்த்த விவரம் தெரிந்தவர்கள் இது புகைப்படமே அல்ல, சுவரொட்டியின் டிஜிட்டல் நகல் என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த சுவரொட்டி இணையத்தளத்தில் வேகமாக பரவ ஆரம்பித்தது.

சீமான் பதிலடி

இந்த நிலையில் இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்ட ஒரு ஆபாசமான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் நடத்திய கண்டன கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், கத்தி பட தயாரிப்பில் ஈழ எதிர்பாளர்களின் பங்களிப்பு ஏதுமில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவ்வளவுதான், சித்தம் கலங்கிப்போன அந்த இணையத்தளம் உடனடியாக லைக்கா நிறுவனத்தின் அடுத்தப்படத்தை சீமான் இயக்குகிறார் என்ற ஒரு புரளியை கிளப்பிவிட்டது. இந்த புரளிக்கு. சீமான் கொடுத்த சூசகமாகன பதிலில், கத்தி பட பிரச்சினையில் பின்னணியில் இருப்பது யார் என்ற தகவலும் இருந்தது.  வாலை சுருட்டிகொண்டது அந்த இணையத்தளம்.

எதிர்ப்பின் பின்னணி

கடந்த 2009 ல் இலங்கையில் நடந்து முடித்த இனப்படுகொலையின் போது இந்தியாவிலிருந்து ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனம் இலங்கை அரசுவுக்கு பெரிய அளவில் உதவி செய்துவந்தது. அதற்கு கைமாறாக இந்த நிறுவனத்தின் பிரிவை இலங்கையில் தொடர ராஜபக்ஷே அரசு அனுமதி கொடுத்தது. சரி இதற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். லைக்கா நிறுவனமும் ஒரு தொலை தொடர்பு நிறுவனம். பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உட்பட 17 நாடுகளில் தலைமையிடத்தை கொண்டு தொலை தொடர்புத்துறையில் பெரிய அளவில் தொழில் செய்துகொண்டிருக்கிறது. இதன் அதிபர் சுபாஷ் கரன், இருபது வருடங்களுக்கு முன்னதாக இலங்கை முல்லைத்தீவிலிருந்து புலம் பெயர்த்து போன ஒரு ஈழ தமிழர்.
லைக்கா நிறுவன அதிபர் சுபாஷ் கரன்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சாதிக்க முடிந்ததை இந்தியா மற்றும் சிறிலங்காவில் அவரால் சாதிக்க முடியவில்லை. இந்த நிலையில்
2009ல்  நடந்த இனப்படுகொலைக்கு பின்னர் அங்குள்ள ஈழ தமிழர்களுக்கு உதவிசெய்ய, தனது தாயார் ஞானம்மாள் பெயரில்  ஞானம் ஃபவுண்டேஷன்  என்றொரு அறக்கட்டளை ஆரம்பித்து ஒரு பெரிய தொகையை நன்கொடையாக இலங்கை அரசிடம் கொடுத்து நலத்திட்டத்தை செயல்படுத்த கேட்டுகொண்டார். இலங்கை அரசும், சுபாஷ் கரனுக்கு ராஜமரியாதை கொடுத்து வரவேற்று அவரது நலத்திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தது. அப்போதே எட்டப்பன் வேலை பார்த்து இலங்கையில் இடம்பிடித்த இந்திய தனியார் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகிகளுக்கு அச்சம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.  இந்த நிலையில் லைக்கா நிறுவனம், பெரிய அளவில் முதலீடு செய்து ஒரு தமிழ்படம் எடுப்பதை இந்த இந்திய தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தால் மட்டுமல்ல பல தமிழ்ஈழ எதிர்பாளர்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. இவர்களை பொறுத்தவரை ஈழ தமிழர்கள் என்றால் ஓன்று இலங்கையில் அடிமையாக இருக்கவேண்டும் அல்லது வெளிநாடுகளில் அகதியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். இதற்கு மாறாக இவர்களது தொழிலுக்கு போட்டியாகவே ஒரு ஈழத்தமிழன் வந்தால் இவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? இதன் பாதிப்புதான் கத்தி படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு என்று கூறுகிறார் பழ நெடுமாறன் கட்சியை சேர்ந்த ஒரு நண்பர். இந்த விஷயமெல்லாம் ஏற்கனவே தமிழீழ ஆதரவு தலைவர்களுக்கு தெரிந்திருந்ததால் அவர்களும் எதும் பேசாமல் இருந்து விட்டார்கள் என்கிறார் அவர்.