Friday, August 8, 2014

ஈரானிய திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை



        சொர்க்கத்தின் குழந்தைகள் (பாரசீகம்: بچه‌های آسمان, பாச்சிகா-யெ அசெமான்) என்ற பாரசீக மொழி திரைப்படத்தை முதலில் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்திரைப்படம் சில்ரன் ஆப் ஹெவன் (Children of heaven) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிற மொழித் திரைப்படத்துக்கான அகாதமி விருதை பெற்ற விவரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பன்னாட்டு திரைப்பட விழாக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற இந்த படத்தை எழுதி இயக்கியியவர் மசித் மசிதி (Majid Majidi) என்ற ஈரானியர். இந்த மாதிரி இயக்குனரின் படத்திற்கு இசைப்புயல் இசை அமைத்தால் எப்படியிருக்கும் என்று நமக்கு தோன்றக்கூடும். அந்த நிகழ்வு இப்போது நடந்திருக்கிறது. கடந்த ஒருசில மாதங்களாக இரானிலேயே தங்கி இருந்து மசித் மசிதி இயக்கும் ஒரு ஈரானிய திரைப்படத்திற்கு இசை அமைத்துவிட்டு திரும்பி இருக்கிறார் இசைப்புயல். உலகபுகழ் பெற்ற ஒரு இயக்குனருடன் இணைந்து பணியாற்றியது தமக்கு மிகுந்த மன நிம்மதியை தந்துள்ளதாகவும், அந்த படம் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்பதாகவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இசை,  மொழி, நாடு எல்லாவற்றையும் கடந்து உலகலாவியது என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார் நமது இசைப்புயல்.

No comments:

Post a Comment