சித்தார்த்-வேதிகா
நடிப்பில் காவிய படமாக உருவாகியுள்ள புதிய படம் ‘காவியத்தலைவன்'. இப்படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு விழா
திங்கட்கிழமையன்று சூரியன் எஃப்.எம்.ரேடியோ நிலையத்தில் நடைபெற்றது. முதல்முறையாக
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, காவியத்தலைவன்
திரைப்படம் நமது கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் திரைப்படம். இதை உலகத்தின் சிறந்த
இயக்குநர்களுக்கு போட்டுக்காட்டுவேன் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
கூறியுள்ளார்.
இந்த படத்தில்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் பாடல் ஓன்று அமைந்துள்ளது. இசைப்புயலின் கைவண்ணத்தில்
இந்த பாடலை கேட்பபவர்கள், குறிப்பாக முருகபக்தர்கள், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லாமலிருக்க
மாட்டார்கள்.
திருப்புகழ்
ஏவினை நேர்விழி
மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு
தாமுழு
ஏழையை மோழையை அகலாநீள்
மாவினை மூடிய
நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை யிகழாதே
மாமணி நூபுர சீதள
தாள்தனி
வாழ்வுற ஈவது மொருநாளே
நாவலர் பாடிய
நூலிசை யால்வரு
நாரத னார்புகல் குறமாதை
நாடியெ கானிடை
கூடிய சேவக
நாயக மாமயி லுடையோனே
தேவிம நோமணி ஆயிப
ராபரை
தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையி
னீழலி லேதிகழ்
சீரலை
வாய்வரு பெருமாளே
பொருள்
அம்பினை
நிகர்க்கும் கண்களை உடைய மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை
மூடனை, ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை,
படிப்பே இல்லாத
முழு ஏழையை, மடையனை, என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள நோயும் பிணியும்
கொண்டவனை, உண்மை இல்லாதவானை, இகழ்ந்து ஒதுக்காமல்
சிறந்த மணிகளாலான
சிலம்புள்ள உன் பாதங்களை, ஒப்பற்ற வாழ்வை
(முக்தியை) யான் பெற தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ?
புலவர்கள் பாடிய
நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர் முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை
விரும்பிச் சென்று காட்டிலே கூடிய வீரனே தலைவனே சிறந்த மயில் வாகனனே
தேவி, மனோன்மணி, அன்னை, பராபரை, தேன் மொழியாள் உமையின்
சிறுமகனே
விண்வரை உயர்ந்த
சோலைகளின் நிழலினிலே வளங்கும் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.

No comments:
Post a Comment