தமிழ் சினிமாவில் யார் டாப் நடிகர் என்பதை
தெரிந்துகொள்ள சமீபகாலமாக ரசிகர்களுக்கிடையே ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள்திலகம் எம்ஜியார் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்திற்கு பிறகு
ரஜினியும் கமலும் தனித்துவத்துடன் கொடிகட்டி பறந்து வந்தனர். வயதாகி போனாலும்
இப்போதும் நம்பர் ஒன் நடிகர்கள் என்றல் எந்தவித சந்தேகமும் இல்லாமல் இவர்கள்
இரண்டு பேரைத்தான் சொல்லவேண்டும். இவர்கள் தமிழ் திரை உலகில்
செய்த சாதனைகளை மற்ற நடிகர்கலோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டுமானால் என்னும் பத்து
பதினைந்து வருடங்கள் கழித்துதான் அதை செய்யமுடியும். அந்த அளவுக்கு ரஜினியும்
கமலும் உயரமான இடத்தில் இருகின்றனர்.
இருப்பினும் இன்றைய நாளில் யார் டாப் நடிகர் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? அதற்கு இரண்டு வழிகள் இருகின்றது. ஓன்று, ஒரு படத்தின்
வெற்றி மற்றொன்று ரசிகர்களின் ஆதரவு.
இதில் ஒரு படத்தின் வெற்றியை வைத்து அதில்
நடித்தவர்தான் டாப் நடிகர் என்று முடிவுசெய்வது தவறாக முடிந்துவிடும். ஏனென்றால்
ஒரு படத்தின் வெற்றிக்கு அதில் நடித்த நடிகர் மட்டும் காரணமாகமாட்டார். எம்ஜியார்
படங்களே ஒன்றிரண்டு தோல்வி அடைந்ததை நாம் பார்த்திருக்கிறோம். அடுத்ததாக வருவது
ரசிகர்களின் ஆதரவு. இதுதான் ஒரு நடிகரை உயரத்தில் உட்காரவைப்பது. சரி, அடுத்ததாக, எந்த நடிகருக்கு எவ்வளவு ரசிகர் கூட்டம்
இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? இதை ரசிகர்
மன்றங்களின் எண்ணிகையை வைத்தோ அல்லது இணைய சமூக வலைவுகளிலும் யு டுப்லும் பதிவு
செய்யும் ரசிகர்களின் எண்ணிகையை வைத்தும்
கணக்கிடுவது சரியாக இருக்காது. ஒரு படம் வெளியாகும்போது, முதல் வாரத்தில், தியேட்டரில் அலைமோதும் கூட்டம், அதனால் கிடைக்கும் வசூலை வைத்து யாருக்கு அதிகமான ரசிகர் கூட்டம் இருக்கிறது
என்பதை ஓரளவுக்கு கணிக்கமுடியும். அந்த வகையில், 2014 ல் வெளியான
படங்களில், முதல் வாரத்தில், அதிகமான வசூல்
செய்தபடம் (சென்னையில் மட்டும்) கொச்சடையான்தான். இந்த படத்தின் முதல் வார வசூல்
(சென்னையில் மட்டும்) 1.8 கோடி. இதன்படி பார்த்தால், இன்றய தேதியில், தமிழ் நடிகர்களில் அதிகமான ரசிகர்களை பெற்று முன்னணியில் இருப்பவர் சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த்தான்.

No comments:
Post a Comment