கடந்த இரண்டுவாரங்களாக இணையமெங்கும் லைக்கா, கத்தி, சீமான் என விமர்சன விசக்காற்றுக்கள் அடித்து கொண்டே இருக்கின்றது. கத்தி
படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ராஜபட்சேவிற்கு பெரும் உதவிகளை செய்தவை
என்றும் ராஜபட்சேவை தொழில் முறையில் இணைத்து உள்ளதாகவும், இந்த நிறுவனம் முதலீடு செய்யும் பணத்தை கொண்டு
எடுக்கும் கத்தி படம் தடைசெய்ய படவேண்டும் என்பதே இப்போதுள்ள பிரச்சனை.
படத்தை வெளியிட அனுமத்திக்க மாட்டோம் என்று முகம் தெரியாத சிலர் தொடர்ந்து இணையதளங்களில்
முழக்கமிட்டு வருகின்றனர். விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை
முற்றுகையிடபோகிறோம் என்று தினமும் அறிக்கை வந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில்
மவுனம் காத்த எல்லா ஈழ ஆதரவு தலைவர்களின் அமைதிக்கும் காரணம் தேடாத இணையதள சிந்தாந்திகள்,
சீமானை மட்டும் குறிவைத்து
தங்களது கற்பனை பதில்களை, பதிவுகளை பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
போராட்டத்தை மக்களை நோக்கி நகர்த்துவதை விட சீமான் எதிர்ப்பை நோக்கியே நகர்த்துவதை
பார்த்தால்... இவர்கள் லைக்காவிற்க்காக சீமானை எதிர்கின்றீர்களா ? இல்லை சீமானுக்காக லைக்காவை எதிர்கின்றீர்களா ?
என்ற அய்யப்பாடு எல்லோருடைய
மனதிலும் எழ ஆரம்பித்தது.
இந்த நிலையில், ஒரு அலைபேசி நிறுவனம் போராட்டத்தை தீவிரபடுத்த சென்னையிலுள்ள மாணவர்கள் அமைப்புகளுக்கு
பணம் கொடுக்க முயற்சி செய்வதாக ஒரு செய்தி, காட்டு தீயை போல பரவ, இதுவரை
பேசாமலிருந்த விஜய் ரசிகர்கள் “முடிந்தால் படத்தை தடுத்து பார்” என்று களமிறங்க தயாராகிவிட்டதாக
தெரிகிறது.
ராஜபக்ஷே பணம் சம்பாதிப்பதற்காக தமிழ்நாட்டில் திரைப்படம் எடுக்கிறார் என்ற
முட்டாள்தனமான வாதத்தை முன்வைத்து இணையதளங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம்,
கத்தி படத்திற்கும் அதன் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்திற்கும் நல்ல விளம்பரத்தை கொடுத்துள்ளது
என்பதுதான் உண்மை.
சீமானின் ஆவேச பேட்டி.....

No comments:
Post a Comment