நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல்
விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை
எண்ணுக்கு பேசிய மர்ம ஆசாமி நபர், திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு
இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து
போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்தார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப
நாய் வரவழைக்கப்பட்டது. அஜீத் வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தியபின்னர் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
ஆனாலும் அஜீத் வீட்டிற்கு பாதுகாப்பு போடபட்டு
உள்ளது. வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் விரைவில் பிடிபடுவார் என்றும்
காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

No comments:
Post a Comment