Monday, August 11, 2014

‘கத்தி’ பட எதிர்ப்பின் பின்னணி என்ன?



ஆரம்பிக்கும்போதே எதிர்ப்பு

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, விஜய்   நடித்து வரும் 'கத்தி' படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. வரும் தீபாவளிக்கு படத்தினை வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தயாரிக்க ஆரம்பித்த நாளிலிருந்தே இதற்கு எதிர்ப்பு வந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். பொதுவாக திரைப்படங்களில் வில்லனாக நடிப்பவர் ஏதாவது ஒரு ஜாதி அல்லது மதத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டால்தான் தமிழ்நாட்டில் எதிர்ப்பு வரும். அவைகள் எல்லாம் படம் வெளியான பின்னர்தான் உருவாகும். ஆனால் கத்தி படத்தை பொறுத்தவரை அந்த படத்தின் கதை என்ன என்று இதுவரை யாருக்கும் தெரியாது. இருப்பினும் எதிர்ப்பு வருகிறது என்றால் அதற்கு காரணம் அதன் தயாரிப்பாளர். கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி முதலில் ஒரு இணையத்தளம் செய்தியை வெளியிட்டது. இது குறித்து வேறு எந்த ஊடகங்களிலும் செய்திகள் எதுவும் வரவில்லை. ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்றாலே தமிழீழ ஆதரவு கட்சிகளெல்லாம் எதிர்ப்பு குரல் கொடுக்குமே என்று எதிர்பார்க்கப்பட்டு, அந்த மாதிரி எதுவும் நடக்காததினால் பிரச்சினையை கிளப்பிவிட்ட இணையத்தளம், பேசாமலிருந்துவிட்டது. தற்போது படம் வெளியாகும் நேரத்தில், அந்த இணையத்தளம், “தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு” என்ற ஒரு அமைப்பு நடிகர் விஜய்க்கு மிகவும் கடுமையாக (கீழ் தரமாக ) கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியிருப்பதாக கூறி ஒரு சுரோட்டியின் புகைப்படத்தை வெளியிட்டது.

கண்டன சுரொட்டி 

இந்த புகைப்படத்தை பார்த்த விவரம் தெரிந்தவர்கள் இது புகைப்படமே அல்ல, சுவரொட்டியின் டிஜிட்டல் நகல் என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த சுவரொட்டி இணையத்தளத்தில் வேகமாக பரவ ஆரம்பித்தது.

சீமான் பதிலடி

இந்த நிலையில் இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்ட ஒரு ஆபாசமான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் நடத்திய கண்டன கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், கத்தி பட தயாரிப்பில் ஈழ எதிர்பாளர்களின் பங்களிப்பு ஏதுமில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவ்வளவுதான், சித்தம் கலங்கிப்போன அந்த இணையத்தளம் உடனடியாக லைக்கா நிறுவனத்தின் அடுத்தப்படத்தை சீமான் இயக்குகிறார் என்ற ஒரு புரளியை கிளப்பிவிட்டது. இந்த புரளிக்கு. சீமான் கொடுத்த சூசகமாகன பதிலில், கத்தி பட பிரச்சினையில் பின்னணியில் இருப்பது யார் என்ற தகவலும் இருந்தது.  வாலை சுருட்டிகொண்டது அந்த இணையத்தளம்.

எதிர்ப்பின் பின்னணி

கடந்த 2009 ல் இலங்கையில் நடந்து முடித்த இனப்படுகொலையின் போது இந்தியாவிலிருந்து ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனம் இலங்கை அரசுவுக்கு பெரிய அளவில் உதவி செய்துவந்தது. அதற்கு கைமாறாக இந்த நிறுவனத்தின் பிரிவை இலங்கையில் தொடர ராஜபக்ஷே அரசு அனுமதி கொடுத்தது. சரி இதற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். லைக்கா நிறுவனமும் ஒரு தொலை தொடர்பு நிறுவனம். பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உட்பட 17 நாடுகளில் தலைமையிடத்தை கொண்டு தொலை தொடர்புத்துறையில் பெரிய அளவில் தொழில் செய்துகொண்டிருக்கிறது. இதன் அதிபர் சுபாஷ் கரன், இருபது வருடங்களுக்கு முன்னதாக இலங்கை முல்லைத்தீவிலிருந்து புலம் பெயர்த்து போன ஒரு ஈழ தமிழர்.
லைக்கா நிறுவன அதிபர் சுபாஷ் கரன்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சாதிக்க முடிந்ததை இந்தியா மற்றும் சிறிலங்காவில் அவரால் சாதிக்க முடியவில்லை. இந்த நிலையில்
2009ல்  நடந்த இனப்படுகொலைக்கு பின்னர் அங்குள்ள ஈழ தமிழர்களுக்கு உதவிசெய்ய, தனது தாயார் ஞானம்மாள் பெயரில்  ஞானம் ஃபவுண்டேஷன்  என்றொரு அறக்கட்டளை ஆரம்பித்து ஒரு பெரிய தொகையை நன்கொடையாக இலங்கை அரசிடம் கொடுத்து நலத்திட்டத்தை செயல்படுத்த கேட்டுகொண்டார். இலங்கை அரசும், சுபாஷ் கரனுக்கு ராஜமரியாதை கொடுத்து வரவேற்று அவரது நலத்திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தது. அப்போதே எட்டப்பன் வேலை பார்த்து இலங்கையில் இடம்பிடித்த இந்திய தனியார் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகிகளுக்கு அச்சம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.  இந்த நிலையில் லைக்கா நிறுவனம், பெரிய அளவில் முதலீடு செய்து ஒரு தமிழ்படம் எடுப்பதை இந்த இந்திய தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தால் மட்டுமல்ல பல தமிழ்ஈழ எதிர்பாளர்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. இவர்களை பொறுத்தவரை ஈழ தமிழர்கள் என்றால் ஓன்று இலங்கையில் அடிமையாக இருக்கவேண்டும் அல்லது வெளிநாடுகளில் அகதியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். இதற்கு மாறாக இவர்களது தொழிலுக்கு போட்டியாகவே ஒரு ஈழத்தமிழன் வந்தால் இவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? இதன் பாதிப்புதான் கத்தி படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு என்று கூறுகிறார் பழ நெடுமாறன் கட்சியை சேர்ந்த ஒரு நண்பர். இந்த விஷயமெல்லாம் ஏற்கனவே தமிழீழ ஆதரவு தலைவர்களுக்கு தெரிந்திருந்ததால் அவர்களும் எதும் பேசாமல் இருந்து விட்டார்கள் என்கிறார் அவர்.

No comments:

Post a Comment