Sunday, August 10, 2014

இயக்குனர் லிங்குசாமியின் தமிழ் பற்று.



சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வில்லனின் பெயர் என்ன தெரியுமா? “வளவன்”. இவர் படம் முழுவதும் ஆங்கில மொழிக் கலப்பு இல்லாத தூய தமிழில்தான் பேசுகிறார்.  ஆனால் அவர் குடியும் கும்மாளமுமாக ஒரு ஈவு இரக்கமற்ற கொடுமையான மனிதனாக நடந்துகொள்கிறார். இது போதாதென்று இந்த பட விமர்சனத்தை எழுதிய தினமலர் நாளிதழும் அவர்கள் பங்கிற்கு இந்த கதாபாத்திரம் சீமானை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது என்று ஒரு பெரிய கண்டுபிடிப்பை வெளிட்டுள்ளது. சரி, இந்த பட வில்லனுக்கு வளவன் என்ற பெயரை எப்படி லிங்குசாமி தேர்வு செய்தார் என்று விசாரித்தால், லிங்குசாமி தனது நடுநிலைப் பள்ளிக் கல்வியை (6, 7, 8ஆம் வகுப்புகள்) மூலங்குடியில் உள்ள தூய வளனார் பள்ளியில் படித்திருக்கிறார் என்று தெரியவருகிறது. அந்த நன்றி கடனை தீர்க்கவே இந்த பெயரை தேர்வு செய்திருக்கலாம் என்கிறார் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர். சில நாட்களுக்கு முன்புதான் லிங்குசாமியின் திருப்பதி சகோதரர்கள் முகநூல் பக்கத்தில் திருக்குறளையும் இஸ்லாமியர்களையும் அவமதிக்கும் வகையில் ஒரு படச் செய்தியை வெளியிட்டனர்.
ஆக இனம் திரைப்படத்தின் மூலமாக மூக்கை உடைத்துகொண்ட  லிங்குசாமி முழுவீச்சில் எதிர் நடவடிக்கையில் இறங்கி விட்டார் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment